×

சிங்கம்புணரியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்

சிங்கம்புணரி அக்.10: சிங்கம்புணரி பகுதியில் தற்போது பெய்த மழையால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் விவசாய பணிகளை ஆர்வத்துடன் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கோவில்பட்டி, ஒடுவன்பட்டி, அரசினம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் விளை நிலத்தில் உழுதும், வரப்பு
வெட்டியும் தயார் செய்து வைத்துள்ளனர். மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் நெல் நாற்றுகளை நடவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்