×

திருமங்கலம் டூ சென்னம்பட்டி அரசு பஸ்சில் தலைக்கு மேல் தொங்கும் தகரத்தால் ஆபத்து

திருமங்கலம், அக். 10: திருமங்கலம்- சென்னம்பட்டி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சின் படிகட்டில் அவிழ்ந்து தொங்கும் விளம்பர தகரத்தினால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். திருமங்கலத்திலிருந்து மதுரை பெரியார் மற்றும் சென்னம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (வண்டி எண் டிஎன் 58. என். 1918) ஸ்பேர் பஸ்சாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் இரண்டு புறமுள்ள கண்ணாடிகளில் வர்த்தக விளம்பரம் எழுதப்பட்ட தகரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தகரம் தற்போது அவிழ்ந்து தொங்கியபடி காட்சி தருகிறது. முன்பக்க படிக்கட்டில் ஏறி இறங்கும் வழியில் தலையில் தட்டும் இந்த தரகத்தினால் பஸ்சில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அச்சத்துடனேயே பயணம் மேற்கொள்கின்றனர். பஸ் செல்லும் வேகத்தில் காற்றில் படபடவென அடித்து வரும் இந்த தகரம் எந்த நேரத்திலும் அவிழ்ந்து பஸ்சினுள்ளோ அல்லது சாலையிலோ கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த பஸ்சில் ஆபத்தினை தலைக்கு மேல் வைத்து கொண்டு தொடர்ந்து பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கழகம் உடனடியாக இந்த டவுன் பஸ்சின் விளம்பர தகரத்தினை அகற்றி பயணிகளின் நலனை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Tags : Thirumangalam ,Chennai ,
× RELATED திருமங்கலத்தில் ஒரு நாள் முழுவதும் ரயில்வேகேட் அடைப்பு: பொதுமக்கள் அவதி