×

நீர்பாசன தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்

மதுரை, அக். 10: கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில், மேலூர் அருகேயுள்ள செம்மணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேது உள்ளிட்ட விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த புகார் மனுவில், ‘செம்மணிப்பட்டியில் உள்ள கண்மாயை பொதுப்பணித்துறை மூலம் குடிமராமத்து பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணிக்கு கண்மாய் ஆயக்கட்டுதாரர்களில், தலைவர் பதவிக்கு போட்டியிருந்தது. இதனால், கடந்த செப்.28ம் தேதி முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. குடிமராமத்து தேர்தலுக்கு முன்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவர் ஒவ்வொரு ஆயக்கட்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்துள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்பாக மதுவுடன் கறி விருந்தும் நடைபெற்றது. தேர்தல் அன்று ஆயக்கட்டுதாரர்களான ஆண்கள், பெண்கள் அனைவரையும் கார்களில் ஏற்றி ஜனநாயக விரோதமாக தேர்தல் விதிகளை மீறி வாக்களிக்க வைத்தனர். ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்த குடிமராமத்து ஆயக்கட்டுதாரர்களின் நீர்பாசன தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, மேலூர் ஆர்டிஓ விசாரிக்க டிஆர்ஓ பரிந்துரை செய்தார்.

Tags : election ,President ,
× RELATED மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளாக தண்ணீர்...