×

கழிப்பறை வசதி கேட்டு காத்திருப்பு போராட்டம்

நத்தம், அக். 10: நத்தம் பேரூராட்சியில் 12வது வார்டில் கொண்டையம்பட்டி உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு கழிப்பறை வசதிவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே மனுகொடுத்திருந்தனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிய பேரூராட்சி நிர்வாகம் கால தாமதம் செய்வதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தாலுகா செயலாளர் அரவிந்த், தாலுகா குழு உறுப்பினர்கள் வினோத், சீனி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட ஒன்று சேர்ந்தனர். இதில் சுமார் 50 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தகவலறிந்த செயல் அலுவலர் சரவணக்குமார், தலைமை எழுத்தர் சந்தனம்மாள், துப்புரவு ஆய்வாளர் சடகோபி மற்றும் பணியாளர்கள் போராட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதற்கான பணியின் தொடக்கமாக பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதி வந்ததும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : toilet facility ,struggle ,
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...