×

விபத்து அபாயத்தில் மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல், அக். 10: கொடைக்கானலில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் அடுத்த பாக்கியபுரம் சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரதான சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எந்தப் பகுதியில் சாய்ந்தாலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் மின்வாரியம் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருமயம் அருகே பைபாஸ் சாலையோரம்...