×

பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் பெயர் பலகை திறப்பு

வத்தலக்குண்டு, அக். 10: வத்தலகுண்டுவில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் கொடியேற்றி பெயர் பலகை திறப்பு விழா நடத்தினர். வத்தலகுண்டுவில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடந்த விழாவிற்கு மஸ்தூர் சங்க திண்டுக்கல் மண்டல தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் கல்யாணகுமார் முன்னிலை வகித்தார். மண்டல துணைத் தலைவர் முத்துராஜ் வரவேற்றார். திண்டுக்கல் மண் பேரவைச் செயலாளர் நாராயணசாமி பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி, பாஜக மாவட்ட பொது செயலாளர் முத்துராமலிங்கம், மஸ்தூர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபுலால், இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, பாஜக மாவட்ட வக்கீல் அணி ராஜா, பஜக மாவட்ட நிர்வாகி அழகுமணி, பாஜக வத்தலகுண்டு ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார், இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் மதுரைவீரன், வத்தலகுண்டு மஸ்தூர் சங்கம் தலைவர் முத்து கிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். திண்டுக்கல் மஸ்தூர் சங்க மண்டல பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Tags : Bharatiya Mastur Sangam ,
× RELATED கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சி பெயர் பலகையில் காவி சாயம் பூச்சு