மக்கள் தொடர்பு முகாம்

கொடைக்கானல், அக். 10: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பூம்பாறை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். முகாமில் கலெக்டர் பேசியதாவது: மலைப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது தேவைகளை பெறுவதற்கு அவர்கள் வேறு எங்கும் சென்று அலையாமல் இருப்பதற்காகவே இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் போன்றவைகளை பெறுவதற்கு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம். வீட்டில் இருந்தபடியே கணினி மூலம் பெறலாம். அதற்கு தக்கவாறு அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முகாமில் முதியோர் உதவித்தொகை, ஆதிதிராவிடர் நல வாரிய அட்டை, விபத்து நிவாரண உதவித்தொகை, சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் 72 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி ,ஆர்டிஓ சுரேந்திரன், தாசில்தார் வில்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : People Contact Camp ,
× RELATED மணியம்பாடியில் மக்கள் தொடர்பு முகாம்