×

பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

சேலம், அக்.10: சேலம் மாநகராட்சி 48வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பொதுமக்களுக்கு நேற்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாநகராட்சி 48வது வார்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதனை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ேஷக் முகமது துவங்கி வைத்தார்.  மாநகராட்சியின் 48வது வார்டு கிளை தலைவர் இன்பியாஸ் தலைமை தாங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : public ,
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்