×

டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து திருமணிமுத்தாற்றில் விடும் கழிவுகள்

சேலம், அக். 10: திருமணிமுத்தாற்றில், டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து சாய கழிவுகளை வெளியேற்றுவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள நத்தத்காடு வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. இந்த தண்ணீர் கொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் வழியாகவும் செல்கிறது. திருமணிமுத்தாறு தண்ணீர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, நெல், சோளம் உள்ளிட்ட பல பயிர்களுக்கு பாசனநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக திருமணி முத்தாற்றில் சாயக்கழிவு நீர் கலந்து, எப்போதும் நுரையாக காட்சியளிக்கிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘சாயப்பட்டறைகள் சமீபகாலமாக டேங்கர் லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து, திருமணிமுத்தாற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே அரசு மெத்தனம் காட்டாமல் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். மேச்சேரி வட்டாரத்தில்விவசாயிகள் பெயர், முகவரி திருத்தம் செய்ய அழைப்புமேச்சேரி, அக்.10: மத்திய அரசின் நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த மேச்சேரி வட்டார விவசாயிகள், பெயர், முகவரியில் மாற்றம் உள்ளதால், இ-சேவை மையத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து வேளாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தின் கிழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் மூன்று தவணையில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் விண்ணப்பித்த ஒரு சில விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று தவணையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் விண்ணப்பித்து, நிதி உதவி பெறாதவர்கள் மற்றும் மூன்றாவது தவணை பெறாதவர்களுடைய விண்ணப்பத்தில் ஆதார்அட்டை, வங்கி பாஸ் புக் என மூன்றிலும் பெயர், முகவரி ஆகியவை மாறுபட்டு இருப்பதால், பணம் வரவு வைக்காமல் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதனை திருத்தம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக் எடுத்து சென்று சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேச்சேரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags :
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்