இளம்பிள்ளையில் தெருநாய் கடித்து 10 பேர் படுகாயம்

இளம்பிள்ளை, அக்.10: இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சில்லி சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த கடைகளை சுற்றி எப்போதும் 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று, 10க்கும் மேற்பட்டோரை துரத்தி சென்று கடித்தது. இதில், இளம்பிள்ளையை அடுத்த பேட்டையார்காடு பகுதியை சேர்ந்த ராஜகோபால்(64), இளம்பிள்ளையை சேர்ந்த சாந்தி(49) உள்ளிட்டோர் இளம்பிள்ளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் வேம்படிதாளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், பைக்கில் செல்பவர்களை துரத்துவதால், சிலர் கீழே விழுந்து அடிபட்டனர். நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: