சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம் தரை பாலப்பணி பாதியில் நிறுத்தம்

சேலம், அக்.10: சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில், அயோத்தியாப்பட்டணம் ேகாமு நகருக்கு செல்லும் வழியில் ரயில்வே தரைப்பால பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்ெகாண்டு செல்வதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.  இந்தியா முழுவதும் ரயில் சிக்னல்கள் தரைப்பாலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சிக்னல் உள்ள பகுதிகளில் ரயில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ேகாமுநகருக்கு செல்லும் வழியில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு ரயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்தது. தொடக்கத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

Advertising
Advertising

இந்த நிலையில் ஏதோ காரணத்தால் ரயில்வே நிர்வாகம் தரைப்பாலப்பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டது. இதனால் கோமுநகர், கே.எம். நகர், சாவடிக்காடு, குட்டக்காடு, மேட்டுப்பட்டி தாதனூர், மாசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் 2 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். கிடப்பில் உள்ள தரைப்பாலப்பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:அயோத்தியாப்பட்டணம் கோமுநகருக்கு செல்லும் வழியில் சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடம் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தை கடந்து தான் கோமு நகருக்கு செல்ல முடியும். இந்த ரயில் வழித்தடத்தை கடந்து வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பலதரப்பினர் வலியுறுத்தினர்.

இந்த பரிசீலித்த ரயில்வே நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்தது. 60 சதவீத பணி மட்டுமே நிறைவடைந்துள்ளது. 40 சதவீத பணி நடைபெறாமல் உள்ளது. பாலம் அமைக்க அந்த இடத்தில் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களால் பணியை முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தரைப்பாலம் முழுவதும் மாதக்கணக்கில் கழிவுநீர், சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த வழித்தடமும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அயோத்தியாப்பட்டணம் ரயில் வழித்தடத்தை கடந்த 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டிய நிலையில் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. பாதியில் நிற்கும் தரைப்பாலப்பணியை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினார்.

Related Stories: