×

எக்ஸல் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

குமாரபாளையம்,அக்.10:  குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில், ரோட்டரி மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி அர்சன் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் சம்பத் வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுனர் நடேசன் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி சங்கத்தின் சர்வதேச இயக்குனர் சாங்வி, உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். உலகத்தில் அமைதி நிலவவும், அன்பு தழைத்தோங்கவும் ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தினம் ஒருவர் முகத்திலாவது புன்னகையை வரவழைக்கும் மகிழ்சியான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக ஆர்சிசி எக்ஸல் எலைட் தலைமையில், 300 ரோட்டரி சங்க மாணவ, மாணவிகள் இயற்கை வளத்தை பாதுகாக்கவும், பசுமை காடுகளை உறுவாக்கவும் அருகில் உள்ள மலை மற்றும் சமவெளியில் 50 கிலோ பதப்படுத்தப்பட்ட வேம்பு விதைகளை விதைத்தனர். பேராசிரியர் சண்முகநாதன் நன்றி  கூறினார்.


Tags : Excel College ,
× RELATED கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் பள்ளி...