×

மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம், அக்.10: குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்ய சட்டமன்ற தொகுதி அளவிலான ஆலோசனை கூட்டம், மாவட்ட  பொறுப்பாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பொறுப்பாளர்கள் மாதேஸ்வரன், சிவசுப்ரமணி, பெருமாள், கோபாலகிருஷ்ணன்,  சரவணன், மோகன்ராஜ், முனிராஜ், சித்ரா, இன்ஜினியர் சரவணன், பேராசிரியர் சிபு  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    குமாரபாளையம் எதிர்மேடு வட்டமலையில்  சாலை உயரமாக இருப்பால், எதிரே வரும் வாகனங்கள் முற்றிலுமாக தெரிவதில்லை.  இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்படுகிறது.  இங்கு விபத்துக்களை தடுக்க, சாலையின் உயரத்தை குறைத்து சமன் படுத்த  வேண்டும்.குமாரபாளையம் 4 சாலை சந்திப்பில் அதிகப்படியான வாகனங்களால்  அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே, விபத்தை தடுக்க, 4 சாலை  சந்திப்பில் புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டுமென என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. தொகுதி பொறுப்பாளர் அறிவொளி சரவணன் நன்றி கூறினார்.

Tags : Justice Advisory Council ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...