திருச்செங்கோடு டிஇஓவுக்கு பதவி உயர்வு

நாமக்கல், அக்.10: திருச்செங்கோடு டிஇஓவாக பணியாற்றி வந்த ரமேஷ், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலராக பணியாற்றி வந்த ரமேஷ்(57). இவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 1985ம் ஆண்டு கல்வித்துறையில் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2  ஆண்டுகளுக்கு முன், மாவட்ட கல்வி  அலுவலராக பதவி உயர்வு பெற்று சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பணியாற்றி வந்தார். தற்போது முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு