×

தலைமை ஆசிரியர்களுக்கு பகுப்பாய்வு கூட்டம்

நாமக்கல், அக்.10: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், நேற்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி உஷா, பள்ளி வாரியாக காலாண்டு தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தார். இதில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் 40 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ், உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,Head Teachers ,
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி...