கிருஷ்ணகிரியில் இன்று மூத்த குடிமக்களுக்கான விளையாட்டுப் போட்டி

கிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரியில் இன்று (10ம் தேதி) மூத்த குடிமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து மூத்த குடிமக்கள் நல உரிமை சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மூத்த குடிமக்கள் நல உரிமை சங்கத்தின் சார்பில், மூத்த குடிமக்களுக்கான விளையாட்டுப் போட்டி இன்று (10ம் தேதி) காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கயிறு இழுத்தல், வேக நடை, இசை நாற்காலி மற்றும் முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இதில், சங்கத்தில் பதிவு பெற்ற காவல்துறை, வருவாய்த்துறை, நில அளவுத்துறை, கால்நடைத்துறை, விவசாயத்துறை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மூத்த குடிமக்கள் நல உரிமைச் சங்க நிர்வாகிகளும், வருவாய்த்துறை ஓய்வுபெற்ற நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்துள்ளனர்.

Tags : Senior Citizens Sports Competition ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்த மக்கள்