பர்கூரை சேர்ந்த நெசவு தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தர்மபுரி, அக்.10: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(36). இவருக்கு வனிதா என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் உள்ளனர். மூர்த்தி சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் நெசவு தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் சிங்கம்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தொப்பூர் அருகே சென்றபோது திடீரென மூர்த்திக்கு  மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டூவீலரை நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்கு  நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Fabricator ,
× RELATED பர்கூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்