ரயில் மோதி வாலிபர் பலி

பாலக்கோடு, அக்.10: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சின்ன மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை கை, கால்கள் துண்டான நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார், சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளம் அருகே நொறுங்கிய நிலையில் கிடந்த டூவீலரையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், டூவீலரில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதும், அப்போது அவ்வழியாக வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் வாலிபர் உடல் துண்டாகி உயிரிழந்திருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ரயில் மோதி வாலிபர் பலி