ஆணைமடுவு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.10: பொம்மிடி அருகே ஆணைமடுவு அருவிக்கு நீர்வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியில் ஆணைமடுவு அருவி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆணைமடுவு அருவியில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அருவிகளில் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர். இந்த அணைக்கட்டு பொம்மிடியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள சேலம்- தர்மபுரி மாவட்ட எல்லையில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில், காட்டெருமை, காட்டுபன்றி மற்றும் பல்வேறு பறவை வகைகள் உள்ளன. சுற்றுலா பயனிகள் வந்து செல்லும் வகையில் வனப்பகுதியில் பாதை ஏற்படுத்த ேவண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நிலவரம்