×

பொதுமக்களுக்கு 2000 மரக்கன்றுகள்

ஓசூர், அக்.10: ஓசூரில் பசுமைத் தாயக சிறப்பு ஆலோசகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பிறந்த தினத்தை முன்னிட்டு, ஓசூரில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் வேம்பு, புங்கன், பழா, நாவல், அத்தி உள்ளிட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் முனிசேகர் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் அருண்ராசன், துணை செயலாளர் தங்கம் வெங்கடேஷ், முன்னாள் நகர செயலாளர் விசுவநாதன் ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கினர். பசுமை தாயக நிர்வாகிகள் சதீஷ், வாசுதேவன், முனிராஜ், விஜயகுமார், சத்தியகுமார், கவி பார்த்திபன், பார்த்தசாரதி, மஞ்சு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ஆலோசகர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

Tags : public ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...