×

புளுதியூர் சந்தையில் 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், அக்.10: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில், 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடக்கிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தைக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு 19,500 முதல் 51,500 வரையும், ஆடு 4,800 முதல் 9,700 வரையும் விற்பனையானது. மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக கூறிய வியாபாரிகள், மொத்தம் 32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை ஆனதாக  தெரிவித்தனர்.

Tags : Puthiyoor ,
× RELATED இறைச்சிக்காக விற்கப்படுவதை தடுக்கும்...