முசிறி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு எம்எல்ஏவிடம் மக்கள் மனு

முசிறி, அக்.10: முசிறி அருகே உள்ள சீவிலிப்பட்டி மற்றும் காமாட்சிபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர். முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சீவிலிப்பட்டி கிராமத்தில் போர்வெல் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனவும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் காமாட்சிப்பட்டியில் சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அவரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து எம்எல்ஏ செல்வராஜ் ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை குறித்த மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: