×

வீட்டுக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் திருட்டு

முசிறி, அக்.10: முசிறி அந்தரப்பட்டி ரோடு காவிரி நகரில் வசிப்பவர் சுரேஷ். இவர் முசிறி அருகே தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறைக்காக சுரேஷ் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று வீடு திரும்பியபோது வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. வீட்டின் பின் கதவு பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முசிறி காவல்நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை