நவ.17ல் மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு முன்பதிவு செய்ய கோளரங்கம் அழைப்பு

திருச்சி, அக்.10: திருச்சி ஏர்போர்ட் அருகே அமைந்துள்ள அண்ணா அறிவியல் மையம் கோளரங்கில் வரும் நவ.17ம் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒருவருக்கு ரூ.60 வீதம் செலுத்தி தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Advertising
Advertising

மேலும் மொத்தமாக தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளி வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் தேர்வுக்கான பணத்தை டிடி மூலமாகவோ, பணமாகவோ (40 மாணவர்களுக்கு மேல் எழுதுபவர்கள் டிடி மூலம்) செலுத்தலாம். தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயரை நவ.10ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இத்தகவலை திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: