பூட்டை உடைத்து ஓய்வு பெல் ஊழியர் வீட்டில் நகை திருட்டு

திருச்சி, அக்.10: திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகநகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(66), ஓய்வு பெல் ஊழியர். இவரது மகள் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மகளை பார்ப்பதற்காக மனைவியுடன் இவர் சென்னை சென்றார். தொடர்ந்து அங்கிருந்து கடந்த 7ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: