அஞ்சல்துறை வார விழா பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, அக்.10: அஞ்சல் துறை வார விழாவையொட்டி திருச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை அஞ்சல் துறையில் அஞ்சல் துறை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா நேற்று திருச்சி தலைமை தபால் நிலையத்தில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதிரவிச்சந்திரன் தலைமையில் குத்துவிளக்கேற்றி கொண்டாடப்பட்டது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

தொடர்ந்து சேவா சங்க பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தில் மாணவிகள் அஞ்சல் துறை குறித்து வாசகம் ெகாண்ட பதாகைகளை ஏந்தி கொண்டு தலைமை தபால் நிலையம் வரை சென்றனர். தொடர்ந்து நடந்த விழாவில் அஞ்சல் அட்டை துவங்கி 140 ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. விழாவில் மத்திய மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் சாந்தலிங்கம், இயக்குநர் லூர்துராஜ், உதவி இயக்குநர் மைக்கேல்ராஜ் மற்றும் ரவீந்திரன், கணபதி சுவாமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: