×

திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் விபரங்களை சேகரிக்கும் போலீசார்

திருப்பூர்,அக்.10: திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் விபரங்களைசேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களில் அதிகப்படியான வெளி மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களால் சமீப காலத்தில் தொழிலில் சிறிதளவு வளர்ச்சி இருந்தாலும், அதிகப்படியான சமூக விரோத செயல்களும், குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் குறித்து அடையாளம் காண போலீசார் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள வடமாநிலத்தவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உளவுப்பிரிவு போலீசார் சென்று அவர்களின் பெயர் மற்றும் சொந்த ஊரில் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை சேகரித்து வருகின்றனர்.
 
கியூ பிரிவு போலீசார், உளவுப்பிரிவு போலீசார், தனிப்பிரிவு போலீசார் எல்லைகள் பிரித்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சேகரித்த பெயர் விபரங்களை வடக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள தனி அறையில் கணினியில் பதிவேற்றும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. பின்னர் அனைத்து வட மாநிலத்தவர்களுக்கும் போலீசாரின் சார்பில் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.இந்த அடையாள எண் மூலமாக தொழிலாளர்கள் எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றாலும் வெளியூர் சென்றாலும் இதனை வைத்து எளிதில் கண்டுபிடித்து விடலாம். கணக்கெடுப்பு மற்றும் விபரங்கள் சேகரிக்கும் பணியானது துரித கதியில் நடைபெற்று வருகிறது.

Tags : state workers ,Tirupur ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது