×

மானுப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் குவியல்

உடுமலை,அக்.10:உடுமலை அருகே உள்ள மானுப்பட்டி ஊராட்சியில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மூணாறு சாலையில் சுமார் 1 கிமீ தூரத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பரவி கிடக்கிறது. குறிப்பாக இந்திரா நகரில் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ஊராட்சி ஒன்றியம் சார்பில், அவ்வப்போது பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இதில்  மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை கைவிடவில்லை. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூணாறு சாலை, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துசெல்லும் பகுதியாகும். இந்த கழிவுகளை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அதிகாரிகளும் தொடர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...