×

ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

பாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ் மகன் வினோத் (எ) பாரதி நிக்கோலஸ் (15). வழுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். நேற்று மதியம் வினோத், அவரது நண்பர்கள் ராகேஷ், பிரதீப் ஆகியோர் அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றனார். ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் வினோத் மூழ்கினார்.

இதையடுத்து விரைந்து சென்று பொதுமக்களிடம் நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சென்று ஆற்றில் இறங்கி வினோத்தை தேடினர். அப்போது வினோத்தின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் அய்யம்பேட்டை போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student ,river ,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவன் பலி