×

நகராட்சிக்குட்பட்ட வார்டுகளின் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ஊட்டி,  அக். 10: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை  மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  தமிழகத்தில் கடந்த மூன்று  ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அரசியல் காரணங்களால்  தேர்தல் தடைப்பட்டு வந்த போதிலும், அதற்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு  காரணங்களை சொல்லி வந்தது. ஆனால், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக  உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சி தேர்தல்  நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த வாரம் உள்ளாட்சி  தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது இணையதளத்தில்  வார்டுகள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதன்படி, ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் குறித்த  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1வது மற்றும் இரண்டாவது வார்டிற்கான  வாக்குச்சாவடி பட்பயர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  அமைக்கப்படுகிறது. 3வது வார்டிற்கு டாக்டர் பசுவைய்யா நகர் நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும், 4வது வார்டிற்கு வன்னாரப்பேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் இரு  வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5வது வார்டிற்கு,  கோடப்பமந்து நகராட்சி ஆரம்ப பள்ளியில் வாக்குச் சாவடி மையம்  அமைக்கப்பட்டுள்ளது. 6வது வார்டிற்கு, லட்சுமி நாராயணபுரத்தில் உள்ள தூய  இருதய ஆண்டவர் பள்ளியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 மேலும்  7வது வார்டுக்கு மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள புனித சூசையப்பள்ளியும், 8வது  வார்டுக்கு பட்பயர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும்  வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 9வது வார்டிற்கு பிங்கர்போஸ்ட் புனித  திரேசா உயர்நிலைப்பள்ளியிலும், 10 மற்றும் 11வது வார்டிற்கு காந்தல்  சுல்தான்பேட் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடியும்,  வார்டு எண் 12க்கு மேரிஸ் ஹில் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியிலும்  வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 13க்கு ஸ்டேட் பேங்க்  காலனியில் உள்ள சிஎஸ்ஐ., சிஎம்எம் மேல்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்  14க்கு குல்முகமது சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி  அமைக்கப்பட்டுள்ளது.  இதே போல் 15வது வார்டுக்கு அரசு கல்லூரியிலும்,  16வது வார்டுக்கு ஓல்டு ஊட்டி நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும், 17வது  வார்டுக்கு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை  அலுவலகம், வார்டு எண் 18க்கு பாம்பே கேசில் பகுதியில் உள்ள  நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திலும், 19வது வார்டுக்கு  சாந்திவிஜய் பெண்கள் பள்ளியிலும், 20வத வார்டு மியான்ஜிபேட் நகராட்சி ஆரம்பப்பள்ளியில் இரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 21வது வார்டுக்கு  லோயர் பஜார் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ., ஹோபார்ட் பள்ளியிலும், 22வது  வார்டுக்கு மியான்ஜிபேட் நகராட்சி ஆரம்பப்பள்ளியில் இரு வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது. 23வது வார்டிற்கு புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில்  இரு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24வது வார்டிற்கு  காந்தல் புனித அந்தோனியாளர் ஆரம்பப்பள்ளியிலும், 25 மற்றும் 26 வார்டிற்கு  காந்தல் ஓம்பிரகாஷ் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டள்ளது.

 மேலும்  27வது வார்டிற்கு முள்ளிக்கொரை நகராட்சி கட்டிடத்திலும், 28வது வார்டிற்கு  டென்மேரி சிஎஸ்ஐ., சிஎம்எம்., பள்ளியிலும், வார்டு எண் 29க்கு,  ராமகிருஷ்ணபுரம் நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையம்  அமைக்கப்பட்டுள்ளது. 30வது வார்டுக்கு மவுண்ட் பிளசண்ட் தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரியம் உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 31வது வார்டிற்கு  ராமகிருஷ்ணாபுரம் நகராட்சி ஆரம்ப பள்ளியிலும் வாக்குச்சாவடி மையம்  அமைக்கப்பட்டுள்ளது. 32வது வார்டிற்கு நொண்டிமேடு புனித தாமஸ் ஆரம்பப்பள்ளியிலும், 33வது வார்டிற்கு தலையாட்டு மந்து நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும், 34வது வார்டிற்கு நொண்டிமேடு புனித தாமஸ் ஆரம்பப்பள்ளியிலும்  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 35வது வார்டிற்கு மஞ்சனக்கொைர  புனித பிரான்சிஸ் ஆரம்ப பள்ளியிலும், 36வது வார்டிற்கு லவ்டேல் புனித  அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இணையதளத்தில்  வெளியிட்டுள்ளது.  மேலும், வார்டு வாரியாக ஒவ்வொரு வார்டில் உள்ள வாக்காளர்கள் குறித்த விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Municipal Wards ,
× RELATED திருவாரூர் நகராட்சி வார்டுகள் வாக்குச்சாவடி மையம்