பல்வேறு வழக்குகளில் தொடர்பு குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

தஞ்சை, அக். 10: தஞ்சையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள், குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் விஜி (எ) விஜயகுமார் (31). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் தஞ்சை தாலுகா இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் விஜயகுமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து விஜயகுமார், திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

இதேபோல் பட்டுக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் போண்டா மணி (எ) மணிகண்டன் (22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணத்தின் அடிப்படையில் போண்டா மணியை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து போண்டா மணி குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: