×

அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

பேராவூரணி, அக். 10: பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஒலி பெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாக்கண்ணு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வீரசந்திரசேகரன் வரவேற்றார்.

விழாவில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் செல்வகுமார், செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். இதைதொடர்ந்து டெங்கு ஒழிப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்து பேசினர். அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட பொறியாளர் இனியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : ceremony ,government school ,
× RELATED படத்திறப்பு விழா