×

டிராக்டர் மோதி சிறுமி பலி

பாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே டிராக்டர் மோதி சிறுமி பலியானார். பாபநாசம் அடுத்த குருபாலகுடியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு மூன்றரை வயதில் மகள் கீர்த்திகா இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பால்வாடியில் படித்து வந்தாள். இந்நிலையில் கீர்த்திகா நேற்று முன்தினம் பால்வாடி சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது குருபாலகுடியை சேர்ந்த சுரேந்தர் டிரைவர் ஓட்டி வந்த டிராக்டர், கீர்த்திகாவின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கீர்த்திகா பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர...