வாலிபரிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு

தஞ்சை, அக். 10: தஞ்சையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவரிடம் இரண்டரை பவுன் செயினை பறித்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ் (32). இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க்க வந்தார். பின்னர் ஊருக்கு செல்ல மருத்துவமனை முன்புள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த வாலிபர் மருதராஜிடமும் தகராறு செய்தார். அப்போது மருதராஜ் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை வாலிபர் அறுத்து கொண்டு ஓடிவிட்டார்.

Advertising
Advertising

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் மருதராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நகையை பறித்து கொண்டு ஓடிய நபர் தஞ்சை கீழவாசலை சேர்ந்த ஹரிஹரன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரிஹரனை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

Related Stories: