×

காளான் விற்பனை அதிகரிப்பு

குன்னூர், அக். 10: புரட்டாசி மாதம் என்பதால் மாவட்டத்தில் காளான் விற்பனை அதிகரித்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். சில விவசாயிகள் காளான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் காளான்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காளான்கள் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. காளான்கள் விற்பனை செய்ய முறையான விற்பனை மையம் மாவட்டத்தில் இல்லாததால்,  விவசாயிகள் இடை தரகர்களை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் திருமண நாட்கள் மற்றும் விழா காலங்களில் காளான்களை பொது மக்கள் அதிகளவு வாங்கி உணவுக்கு பயன்படுத்துகின்றனர். அச்சமயங்களில் காளான் விலை கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பெரும்பாலான மக்கள் அசைவம் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் காளான்களுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது. காளான்கள்  கிலோ ரூ.250 வரை விற்பனையாவதால் விவசாயிகளுக்கு ரூ.150 மட்டுமே கிடைக்கிறது. இதில் இடைத்தரகர்கள் லாபத்தை அதிகளவில் எடுத்துக்கொள்வதாக  காளான் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்திலேயே காளான் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என காளான் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி