கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1,000 தூய்மை தூதுவர்கள் நியமனம்

கும்பகோணம், அக். 10: கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1000 தூய்மை தூதுவா–்கள் நியமிக்கும் நிகழ்ச்சி பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியா் ராஜேஸ்வர் தலைமை வகித்தார். ஆசிரியா் கழக செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். 1000 மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமனம் செய்து வைத்து பட்டீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டா் சரவணன் பேசுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக கூடிய காலம். இவ்வகை கொசுக்கள் உற்பத்தியை தடுத்தாலே நாம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முற்றிலுமாக தடுக்க முடியும். இன்றைய தினம் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மாணவா் படையினர், சாரணா–்கள் இயக்கம், தேசிய பசுமை திட்டம், நாட்டு நலப்பணி திட்ட தொண்டாகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் முற்றிலுமாக பரவாமல் தடுக்க முடியும் என்றார்.

பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் பேசினார். அப்போது டெங்கு காய்ச்சல் பற்றி நாட்டுப்புற பாடல்கள் பாடி மாணவாகளுக்கு எளிதில் புரியும்படியும், சுகாதார தூதுவர்களின் கடமைகள், களப்பணிக்கு சுகாதார தூதுவா–்களை அழைத்து சென்று நாம் நம் வீட்டுக்கு அருகில் செயல்படக்கூடிய சேவைகள் குறித்து களப்பணி மூலம் விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை சாரணர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் வினோத் மற்றும் ராஜேஷ் செய்திருந்தனர்.

Related Stories: