பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1.30 கோடி மதிப்பில் 218 பெண்களுக்கு திருமண நிதியுதவி

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூரில் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் நடந்த ராமா மிர்தம் அம்மையார் திரு மண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 218 பேர்க ளுக்கு ரூ1.30 கோடி மதிப் பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. பெரம்பலூரில் வடக்குமாதேவி சாலையிலுள்ள மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடந்த மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 218 பயனாளிகளுக்கு ரூ1.30கோடி மதிப்பில் திருமண நிதியு தவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் சாந்தா பேசுகையில், சமூகத்தில் வாழும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பெண் கல்விக்கு அதிக முக்கிய த்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இக்குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் அதிகப்படியான கல்லூரிகளைத் தொடங்குவது, பெண்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத் துவது போன்ற நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் பட்டப்படிப்பு படித்த பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தின்கீழ் 218 பேர்களுக்க ரூ1.30 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல் யத்திற்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் அனைவரும் அரசாங்கத்தின் மூலமாக பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ் வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட சமூகநல அலுவலர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : district ,Perambalur ,
× RELATED கோஷ்டி மோதலில் பெண்கள்