தனியார் துறைகளில் பணிபுரிய பெரம்பலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய் ப்புத்துறை அலுவலகத்தில் நாளை (11ம்தேதி) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தனியார்துறை நிறுவனங்களும் - தனியார்த்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய் ப்புத்துறை அலுவலக வளாகத்தில் நாளை (11ம்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய் ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால் இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Employment Camp ,Perambalur ,
× RELATED கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்