அரியலூரில் வரும் 15ம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

அரியலூர், அக். 10: அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி நடக்கிறது. தடகளம், ஹாக்கி, கையுந்து பந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

தடகளம் மற்றும் குழு போட்டியில் தாமதமாக வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இயலாது. ஒரு போட்டியாளர் இரண்டு தடகள பிரிவுகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் 15ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும். தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், குழு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : sports competition ,Ariyalur ,
× RELATED டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் சங்க...