×

போனஸ் அறிவிப்பை வரும் 14-ம் தேதிக்குள் வெளியிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்

கோவை,அக்.10:  தமிழகம் முழுவதும் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை ஏ.டி.டி காலனியில் உள்ள தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நல திட்டங்கள், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தீபாவளி போனஸ் விவகாரத்தில் மட்டும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. தோட்ட அதிபர்கள் தரப்பில் வரவு செலவு குறைவாக இருப்பதால் தீபாவளி போனஸ் வழங்க ஒருமாதம் அவகாசம் கோரப்பட்டது. ஒரு மாதம் அவகாசம் கோரினால் தீபாவளி பண்டிகையே முடிந்துவிடும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் 14ம் தேதிக்குள் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிடாவிட்டால் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். இதில் ஆனைமலை தோட்ட தொழிலதிபர்கள் சங்க தலைவர் மகேஷ்நாயர், புதுத்தோட்டம்  எஸ்டேட்ஸ் லிமிடெட்டின் பாலசந்திரன், டாடா காபி லிமிடெட் சார்பில் ஆலிவர்  பிரவீன் குமார், டீ எஸ்டேட்ஸ் இந்தியா லிமிடேட் சார்பில் ரஞ்சித்  கட்டப்புரம், வாட்டர் பால்ஸ் எஸ்டேட் சார்பில் விக்ரம் குசலப்பா, பாம்பே  பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் லிமிடெட் சார்பில் திம்மையா, பெரிய கரமலை டீ  மற்றும் ப்ரோடுயூஸ் கம்பெனி லிமிடெட் சார்பில் அருண் கோவிந்த், தமிழ்நாடு  தோட்டத்தொழிலதிபர்கள் சங்க செயலாளர் பிரதீப் குமார், தமிழ்நாடு  தோட்டத்தொழிலதிபர்கள் சங்க ஆலோசகர் ராம்குமார், தொழிற்சங்க கூட்டுக்குழு  தலைவர் வால்பாறை அமீது, எல்பிஎப் சவுந்திரபாண்டியன், ஐஎன்டியூசி  கருப்பையா, ஏஐடியூசி மோகன், ஏஐடிடிஎஸ் எட்வர்டு, எல்எல்எப் விசிக  வீரமணி,கேசவமருகன், ஏடபிள்யூயூ வர்கீஸ், டிஎம்ஏடிடிஎஸ் கந்தசாமி,  ஐஎன்பிடபிள்யூயூ அருணகிரிபாண்டியன், விடிடிஎஸ் தர்மராஜ், பிடிஎம்  பால்ராஜ் உள்ளிட்ட  13 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags : struggle ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...