தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு, அக். 10:  ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டைபிஸ்ட்டுகள், டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியில் அமர்த்தப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: