×

குளித்தலையில் தொடர் மின் வெட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

குளித்தலை: அக்.10: குளித்தலையில் தொடர்மின்வெட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 2-வது நகராட்சியாக குளித்தலை நகராட்சி உள்ளது. இதில் 24 வார்டுகளில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ அலுவலகம், கோட்ட மின்வாhpய அலுவலகம், எல்.ஐ.சி. அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மகளிர் காவல்நிலையம், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம், தலைமை தபால்நிலையம் மற்றும் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக குளித்தலை பகுதியில் குறைந்த அழுத்த மின்விநியோகம் இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்களிலும் தினந்தோறும் நடைபெறும் பணிகள் பாதிக்கப்படுகிறது.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு 2 வாரங்களே இருப்பதால் குடும்ப பெண்கள், வீட்டிற்குத் தேவையான அதிரசம், முறுக்கு, மாவு அரைக்க மாவு மில்லுக்கு செல்வதால் அங்கு குறைந்த அழுத்த மின்விநியோகத்தால் கால்கடுக்க நீண்டநேரம் காத்து கிடைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் வீடு கடைகளில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள், டி.வி, மின்விசிறி, ஏசி, ஏர்கூலர் பழுதடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு பொதுமக்கள் பொpதும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சமீபகாலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொசுத்தொல்லையால் இரவுநேரங்களில் பெரும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மின்சாரவாரிய அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி குளித்தலை பகுதியில் சீரான மின்சாரம் வழங்கவும் தொடர்மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...