அத்தாணி கைகாட்டி பிரிவு சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

அந்தியூர்,அக்.10:  அத்தாணி கைகாட்டி பிரிவு சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அந்தியூர் அருகேயுள்ள குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி அத்தாணி கைகாட்டி பிரிவு. இது அந்தியூர், பவானி, அத்தாணி செல்லும் மூன்று ரோடுகள் சந்திக்கும் பஸ் நிற்கும் இடமாகவும் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள மெயின் ரோட்டில் மாதக்கணக்கில் மழை நீர், இந்த பகுதி கழிவு நீருடன் சேர்ந்து தேங்கியுள்ளது. இது அந்த பகுதியில் பெரும் துர்நாற்றத்துடன் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் வகையில் உள்ளது. மேலும், பள்ளிக்குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத நிலையும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஊராட்சி அல்லது நெடுஞ்சாலை துறையினரால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: