தஞ்சை கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.10: தஞ்சை கோயிலில் இந்தி கல்வெட்டுக்கள் பதிக்கப்படுவதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை பிரகதீசுவரர் கோயிலில் தமிழ்கல்வெட்டுக்களை அகற்றிவிட்டு இந்தி கல்வெட்டுக்களை பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டஇளைஞர்அணி செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுக்கள் பதிக்கப்படுகிறது.

அதனை உடனே அகற்ற வேண்டும் இது தமிழ் கலாச்சாரத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் தமிழக அரசும் இதற்குத் துணைபோவது கண்டிக்கத்தக்கது. பள்ளபட்டி அருந்ததியர் சுடுகாடு ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பினை அகற்றி நிரந்தர தீர்வுகாணவேண்டும். அரவக்குறிச்சி தாசில்தார் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ஏற்கனவே புகார் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Indian ,Republican Party ,Tanjore Temple ,
× RELATED வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு