மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு

கரூர், அக். 10: கரூர் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரூர் பாலம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி(52). மின்வாரியத்தில் போஸ்ட் மேனாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 20ம்தேதி அன்று பசுபதிபாளையம் தெற்கு தெரு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் கோளாறினை சரி செய்து கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்து படுகாயமடைந்தார்.ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமாரசாமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது