இலவச பயிற்சி முகாம்

ஈரோடு, அக். 10: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர், தீயணைப்பு வீரர் உள்ளிட்டவைகளுக்கான தேர்வு நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்கூறு தேர்வுக்கு ஏதுவாக ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் 2 தேர்வை எளிதில் எழுத வசதியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 14ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: