×

தெற்கு திட்டங்குளத்தில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா

கோவில்பட்டி, அக். 10: கோவில்பட்டி  அருகே தெற்கு திட்டங்குளம் கிராமத்தில்  இம்மானுவேல் சேகரனின் 95வது பிறந்தநாள் விழா நடந்தது.
 இதையொட்டி அங்குள்ள அவரது சிலைக்கு சமூக ஆர்வலர் அன்புராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தொண்டர் அணி மாவட்ட பொறுப்பாளர் கனகராஜ், ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள்சாமி, வக்கீல்  முத்துகுமார், மாரித்துரை, முனியசாமி, முருகன், பழனி, பேச்சுபாண்டியன்,  ராஜா, திட்டங்குளம் எல்ஐசி பால்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Emanuel Sheeran ,Birthday Party ,Southern Planning ,
× RELATED கலைஞரின் 97வது பிறந்த நாள் விழா; 1.33...