கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

திருச்செந்தூர், அக்.10: திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகஸ்தர் மெய்கண்டமுத்து, பொருளாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெயந்திநாதன் வரவேற்றார். பல் மருத்துவர் சங்கரசுப்பிரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஆகியோர் 10,பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
Advertising
Advertising

இதில் சைவ வேளாளர் ஐக்கிய சங்க துணைச் செயலாளர் முத்துக்குமார்கண்ணன், நிர்வாகஸ்தர்கள் ஞானசுந்தரம், ஆனந்தராமச்சந்திரன், வேலுமணி, சீனிவாசன், பேச்சிமுத்து, ராஜேஷ், முன்னாள் நிர்வாகஸ்தர்கள் லட்சுமணன், இசக்கிமுத்து, குமார், மாணிக்கம், சுந்தர், சங்க கணக்கர்கள் சடகோபால், முருகேசன், இளைஞர் பேரவை நிர்வாகிகள் மணிகண்டன், துர்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் சந்தனராஜ் நன்றி கூறினார்.

Related Stories: