தூத்துக்குடியில் பணம் கேட்டு தாயை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடியில்  பணம் கேட்டு  தாயை கட்டையால் தாக்கியதாக பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி  சின்னமணி நகரை சேர்ந்த ஜெயராம் மகன் சுதந்திரராஜ் (28). பிரபல  ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் உள்ளன.  கடந்த ஆண்டு  அடுத்தடுத்த இரு நாட்களில் 2 பேரை கொலை செய்த வழக்கில் திருவாரூரில் கைது  செய்யப்பட்டார். மேலும் குண்டர் தடுப்பு சிறையில் கைதான இவர், பின்னர் ஜாமீனில் வௌிவந்தார். இந்நிலையில் தனது வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் தருமாறு தாய் தங்க மாரியம்மாளிடம் கேட்டுள்ளார்.  அவர் பணம் தரமறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதந்திரராஜ்,  கட்டையால் தாயைத் தாக்கினார். இதில் காயமடைந்த தங்க மாரியம்மாள், தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் எஸ்ஐ   ராஜாமணி, சுதந்திர ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories:

>