ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

தூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி  சுந்தரராமபுரத்தைச் சேர்ந்தவர் பாலகணேசன் (54). நகை தொழிலாளியான இவர், கடந்த 2 மாதங்களாக  உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று காலை   4வது  ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக  வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த  ரயில்வே போலீசார், உடலை மீட்டு தூத்துக்குடி  அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். இறந்த பாலகணேசனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: